» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புதன் 16, மே 2018 12:28:35 PM (IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும்படி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ராமசுப்பு என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது: ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் ஆலை இயங்க அனுமதி அளித்துள்ளது.
எனவே இந்த வழக்கை முழுமையாக ஆராயாமல் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து, ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இந்த மனுவின் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உத்தரபிரதேச அரசின் பசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகை ஹேமமாலினி நியமனம்
சனி 23, பிப்ரவரி 2019 4:56:28 PM (IST)

வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதம் நடத்த மோடி தயாரா?: ராகுல் சவால்
சனி 23, பிப்ரவரி 2019 3:50:30 PM (IST)

பெங்களூரில் ஏரோ இந்தியா கண்காட்சியில் தீ விபத்து : 100 கார்கள் சேதம்
சனி 23, பிப்ரவரி 2019 2:15:01 PM (IST)

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் உறுதி
சனி 23, பிப்ரவரி 2019 8:45:45 AM (IST)

புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:20:04 AM (IST)

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:09:19 AM (IST)

kingமே 16, 2018 - 12:35:40 PM | Posted IP 162.1*****