» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆட்சியமைக்க எடியூரப்பாவைதான் ஆளுநர் முதலில் அழைப்பார் : சுப்பிரமணியன் சுவாமி சொல்கிறார்

புதன் 16, மே 2018 12:52:54 PM (IST)

கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவைதான் ஆளுநர் முதலில் அழைப்பார் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது. பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் வகையில் முதல்வர் பதவியை மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு விட்டுக்கொடுத்து காங்கிரஸ் காய் நகர்த்தியுள்ளது. 

இதனால் கர்நாடகாவை ஆளப்போவது யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ், ஜேடிஎஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பாவின் கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆளுநர் வஜூபாய் வாலா பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதேநேரத்தில் கூட்டணி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகளும் ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது.

இதனால் ஆளுநர் வஜூபாய் வாலா முதலில் யாரை ஆட்சியமைக்க அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநர் முதலில் எடியூரப்பாவைதான் அழைப்பார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, எடியூரப்பாவைதான் ஆளுநர் அழைப்பார். தனிபெரும் கட்சியாக உள்ளதால் பாஜகவைதான் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory