» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ம.ஜ.த எம்எல்ஏ களிடம்100 கோடி கொடுப்பதாக பேரம் பேசும் பாஜக : குமாரசாமி குற்றச்சாட்டு

புதன் 16, மே 2018 1:42:47 PM (IST)

ரூ.100 கோடி கொடுப்பதாக தனது கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.இதில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் மத சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ° கூட்டணி சேர்ந்து ஆட்சியமைப்பதில் முனைப்புடன் உள்ளது.மேலும் தான் நாளை முதல்வராக பதவியேற்பது உறுதி என குமாரசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ.,கள் ஆலாேசனை கூட்டம் இன்று பெங்களுருவில் நடைபெற்றது.இதில் அக்கட்சியினை சேர்ந்த இரண்டுஎம்எல்ஏ.,கள் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி நான் ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக ரூ.100 கோடி கொடுப்பதாக தனது கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கே இடமில்லை. எனக்கோ, என் கட்சிக்கோ அதிகார பசி இல்லை. ஆட்சி அமைக்க ஆளுநரிடம் விரைவில் உரிமை கோருவோம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory