» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு : மத்திய அமைச்சர்கள் வாழ்த்து

வியாழன் 17, மே 2018 10:36:08 AM (IST)

கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று காலை 9 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் வஜுபாய் வாலா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

கர்நாடகத்தில் 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது..  இதன்மூலம் கர்நாடகத்தின் 23-வது முதல்வரானார். 2007 மற்றும் 2008-க்குப் பிறகு தற்போது மீண்டும் 3-ஆவது முறையாக எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் தற்போதைக்கு எடியூரப்பா மட்டுமே முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.  பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், ஜெ.பி. நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ஆட்சி அமைக்க பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) - காங்கிரஸ் கூட்டணி என இரு தரப்பும் உரிமை கோரியிருந்த நிலையில், 104 எம்எல்ஏக்கள் வைத்துள்ள பாஜகவை ஆளுநர் வஜுபாய் வாலா ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory