» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எடியூரப்பா பதவியேற்புக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவை அருகே காங்கிரஸ், மஜத தலைவர்கள் மறியல்

வியாழன் 17, மே 2018 12:25:00 PM (IST)கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை அருகே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் தர்ணா போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. அதேசமயம், தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைக்க காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின. இந்த சூழலில் நேற்று இரவு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளூநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பா கர்நாடகத்தின் 23-வது முதல்வராகப் பதவி ஏற்றார்.

எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பை நிறுத்திவைக்கக் கோரி நேற்று நள்ளிவரவு காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விடிய விடிய நடந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பா பதவி ஏற்புக்கு தடைவிதிக்க உச்ச நீதின்றம் மறுத்துவிட்டது. ஆளுநரிடம் தாக்கல் செய்த எம்எஎல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை இன்று தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரில் உள்ள விதான்சவுதா அருகே உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி உள்ளிட்டோரு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களோடு சேர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களும் தர்ணாபோராட்டத்திலும, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், விதான் சவுதா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory