» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காவிரி திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் வழக்கில் நாளை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு

வியாழன் 17, மே 2018 1:34:36 PM (IST)

காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் மீதான வழக்கில் தீர்ப்பு நாளை மாலை வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த திருத்தங்களை மேற்கொண்டு, திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் தாக்கல் செய்தார். இதில், காவிரி அமைப்புக்கு பெயரை மாற்றி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து, காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் மீதான வழக்கில் தீர்ப்பு நாளை மாலை வழங்கப்படும் என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.மேலும், திருத்தப்பட்ட வரைவு திட்டம் மீதான தீர்ப்பு நாளை மாலை 4 மணிக்கு வழங்கப்படும் என்றும், நாளை தீர்ப்பு வழங்காவிட்டால் 22, 23ம் தேதிகளில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory