» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெரும்பான்மை நிரூபிக்க 15 நாட்கள் தேவையில்லை கர்நாடகமுதல்வர் எடியூரப்பா பேட்டி

வியாழன் 17, மே 2018 6:41:37 PM (IST)

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் தேவையில்லை, விரைவில் நிரூபிப்போம் என கர்நாடகமாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

கடும் போட்டிகள் மற்றும் சச்சரவுகளுக்கிடையே கர்நாடக மாநிலத்தின் 23 வது முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றார்.இதில் 56 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் முதல் கையெழுத்திட்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது,இந்த மகத்தான வெற்றி பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் பிரசாரத்தால் வெற்றி கிடைத்துள்ளது. 

எங்கள் பக்கம் வந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் காங். மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ-க்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டு, விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.பெரும்பான்மையை நிரூபிக்க எங்களுக்கு 15 நாட்கள் தேவையில்லை, கூடிய விரைவில் நிரூபிப்போம் என அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory