» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் சவுமியா வெற்றி: பாஜகவின் கோட்டையைத் தகர்த்தது காங்கிரஸ்
புதன் 13, ஜூன் 2018 3:38:13 PM (IST)
கர்நாடக மாநிலம் ஜெயநகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா வெற்றி பெற்றார். இதன்மூலம் 10 ஆண்டுகளாக பாஜகவின் வசம் இருந்த ஜெயநகர் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

இதில் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி முன்னணியில் இருந்தார். அடுத்த 5 சுற்றுகளில் வாக்கு வித்தியாசம் குறையத் தொடங்கியது. பின்னர் ஓட்டு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வெற்றி பெற்றதால் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்தது. 2 முறை தக்க வைத்த தொகுதியை பா.ஜனதா இழந்துவிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜே.டி.எஸ். கட்சி ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் வசம் இருந்த ஜெயநகர் தொகுதி தற்போது காங்கிரசுக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:20:04 AM (IST)

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:09:19 AM (IST)

11 லட்சம் பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்றுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வியாழன் 21, பிப்ரவரி 2019 5:05:36 PM (IST)

ஜம்முவில் புல்வாமா தாக்குதல் பாதிப்பிலிருந்து இயல்பு நிலை திரும்பியது: ஊரடங்கு உத்தரவு நீக்கம்!!
வியாழன் 21, பிப்ரவரி 2019 4:15:26 PM (IST)

நளினி சிதம்பரம் தொடர்புடைய சாரதா சிட்பண்ட் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்!!
புதன் 20, பிப்ரவரி 2019 5:51:27 PM (IST)

அயோத்தி வழக்கில் 26-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
புதன் 20, பிப்ரவரி 2019 5:46:17 PM (IST)
