» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தில் இடியுடன் கூடிய புழுதி காற்று வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வியாழன் 14, ஜூன் 2018 10:12:08 AM (IST)

தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய புழுதி காற்று வீசக்கூடும். கடலோரம், தெற்கு கர்நாடகா பகுதிகள், அசாம், மேகாலயாவில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம் பற்றி, இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கனத்த அல்லது மிக கனத்த மழை, கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு கர்நாடக மாவட்டங்களில் இன்று பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல அசாம், மேகாலயாவிலும், கேரளாவின் சில பகுதிகளிலும், மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் சில பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

உள் தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய புழுதி காற்று வீசக்கூடும். இதே நிலை, தெலுங்கானா, ராயலசீமா, வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவிலும் நீடிக்க கூடும். தமிழகம், கர்நாடகா, கேரளா, ஒடிசா, அந்தமான் நிகோபார் தீவு கடலோர பகுதிகளில் மணிக்கு அதிகபட்சம் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory