» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல்: ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரிப்பு

வியாழன் 14, ஜூன் 2018 5:52:38 PM (IST)காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கையை இந்திய வெளியுறவுத்துறை நிராகரித்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுகிறது, இதுதொடர்பாக சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. "வெளிப்படையான பாரபட்சம்" மற்றும் "தவறான கதை" உருவாக்கும் முயற்சி என்று இந்திய வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது.  "ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது. 

ஐ.நா.வின் அறிக்கை ஏமாற்றும் செயல்,  முரண்பாடானது மற்றும் நோக்கம் கொண்டது. இதுபோன்ற அறிக்கைக்கான நோக்கம் என்னவென்று கேள்வியை எழுப்புகிறோம்,” ஐ.நா.வின் அறிக்கை இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவது. ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் இந்தியப்பகுதியை சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்து உள்ளது,” என இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. பெரும்பாலும் சரிபார்க்கப்படாத தகவல்கள் தொகுப்பை கொண்டு திட்டமிடப்பட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது எனவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory