» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புழுதிப்புயல்: இரண்டே நாளில் பதினைந்து பேர் பலி

வியாழன் 14, ஜூன் 2018 8:10:22 PM (IST)

உத்தரப்பிரதேசத்தில் புழுதி புயல் காரணமாக இரண்டே நாளில் 15 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மை காலமாக வடமாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழையும், புழுதிப்புயலும் ஏற்பட்டு வருகிறது.  இந்நிலையில், நேற்றும் இன்றும் மட்டும் உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட புழுதிப்புயலின் காரணமாக 15 பேர் பலியாயினர். அதிகபட்சமாக சீதாப்பூரில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதே போல், கொன்டா, குவாஷாம்பி, ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றிலும் மூன்று பேரும், ஃபாசியாபாத், ஹர்தோயி, சித்ராகூட் பகுதிகளில் ஒருவர் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory