» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுல் காந்தியுடன் இயக்குநர் ரஞ்சித் சந்திப்பு: பேரறிவாளன் விடுதலை குறித்து கோரிக்கை

புதன் 11, ஜூலை 2018 11:53:02 AM (IST)

பேரறிவாளனை விடுவிக்க ஆட்சேபம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது அரசியல் மற்றும் திரைத்துறை, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.  இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

டெல்லியில் ராகுல் காந்தியுடனான சந்திப்பின்போது, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரம் குறித்தும் பேசியதாக தெரிகிறது. இந்நிலையில், பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என ராகுல் கூறியதாக இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory