» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று கருத்து: சசிதரூருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

சனி 14, ஜூலை 2018 3:41:59 PM (IST)

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று கூறியது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் ட்விட்டர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான சசிதரூர், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றால், இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று பேசியிருந்தார். சசிதரூரின் பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி, சசிதரூருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷீர்ஜில், காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரும் பாஜக தவறுகளை சுட்டிக்காட்டும் போது கவனமாக பேசவேண்டும் என்று தெரிவித்திருந்தார்..ஆனால் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சசிதரூரின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிராக கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், " சசிதரூரின் கருத்துக்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், அரசியலமைப்பை அவமதிக்கும் வகையிலும் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். .

இந்த வழக்கை இன்று (ஜூலை 14 ) விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி சசிதரூர் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கமான சட்ட நடைமுறைகள் மட்டுமின்றி சசிதரூரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களுக்குச் சம்மன் அனுப்ப அனுமதி அளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory