» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தீபாவளி நாளில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்படும்: சுப்ரமணியன் சுவாமி பேட்டி

திங்கள் 16, ஜூலை 2018 12:12:33 PM (IST)

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தீபாவளி அன்று தொடங்கப்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார். 

பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி  செய்தியார்களிடம் கூறுகையில், '2014ம் ஆண்டில் பாஜக அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது.  3 பெரிய வாக்குறுதிகளில் 2 நிறைவேற்றப்பட்டுள்ளது.  நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டம். இந்துத்வாவை வளர்க்க வேண்டும் ஆகியவற்றில் 2 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள பணத்தை மோடி அரசு திரும்ப கொண்டு வரவில்லை என்றாலும், 4 ஆண்டில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை போல் ஒரு அமைச்சர் மீது கூட ஊழல் புகார் கூற முடியவில்லை. 2019ம் ஆண்டு தேர்தலிலும் மீண்டும் பாஜக வெற்றி பெறும். 2014ம் ஆண்டு தேர்தலை விட 10 இடங்கள் அதிகமாக வெற்றி பெறும்' என்றார். மேலும், அவர் கூறுகையில்,' அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்கும். இது குறித்து அமித்ஷா கூறினாரா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால் வரும் தீபாவளிக்கு ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும். நாட்டின் பொருளாதாரத்திற்கு ஜிஎஸ்டி அவசியம் என்ற கருத்து ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory