» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை: மூத்த வழக்கறிஞர் மீது புகார்

திங்கள் 16, ஜூலை 2018 5:39:40 PM (IST)

டெல்லியில் மூத்த வழக்கறிஞர் ஒருவர், பெண் வழக்கறிஞரைப் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் அறைக்குக் குடி போதையில் வந்த மூத்த வழக்கறிஞர் பலவந்தமாக அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாகக் காவல் துறை ஆய்வாளர் ரோமில் பன்னையா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து பெண் வழக்கறிஞர், காவல் துறையினரிடம் தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளார்.

பெண் வழக்கறிஞரிடம் இருந்து ஆடியோ வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட வழக்கறிஞரை இவ்வழக்குத் தொடர்பாக மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்து மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் காவல் துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நிகழ்ந்த இடத்தை காவல் துறையினர் சீல் வைத்து சோதனைகள் நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட மூத்த வழக்கறிஞர் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும், பெண் வழக்கறிஞரின் புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory