» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நூறு கோடி முறை முயற்சித்தாலும் ஆதார் தகவலை திருட முடியாது: ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டம்

திங்கள் 16, ஜூலை 2018 5:44:06 PM (IST)

நூறு கோடி முறை முயற்சித்தாலும், ஆதார் தகவல்களைத் திருட முடியாது என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலம், பனாஜியில் நேற்று (ஜூலை 15) நடைபெற்ற கோவா தகவல் தொழில்நுட்ப நாள் கொண்டாட்டத்தில் மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார். இதையடுத்து பேசிய அவர், தனது ஆதார் அட்டையில், தனது புகைப்படம், என் பாலினம், பாட்னாவின் நிரந்தர முகவரி, முத்திரை போன்ற தகவல்கள் இருக்கின்றன. ஆனால். தவறாக பயன்படுத்த உதவக் கூடிய மத அடையாளம், சாதி, வருமானம் போன்ற தனிநபர் தகவல்கள் இல்லை.

கைரேகைகள், கண் விழித்திரை போன்றவற்றின் மூலமே தனிநபரின் தகவல்களை அறிய முடியும் என்பதால், அவை மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதனால், நூறு கோடி முறை முயற்சித்தாலும், ஆதார் தகவல்களைத் திருட முடியாது. நாடாளுமன்ற ஒப்புதலுடன் இதற்காகக் கடுமையான சட்டமும் இருக்கிறது. கைரேகை மற்றும் விழித்திரை பதிவை யாருக்காவது அளித்து, தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தத் துணைபோனால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்தியாவில், இதுவரை 80 கோடி வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 122 கோடி ஆதார் அட்டைகள் உள்ளன எனவும் அமைச்சர் கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory