» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

லோக்சபாவில் கண் அடிப்பது, கட்டிபிடிப்பது சரியில்லை: ராகுலுக்கு சபாநாயகர் சுமித்ரா கண்டனம்

சனி 21, ஜூலை 2018 11:04:39 AM (IST)

லோக்சபாவின் உள்ளே கண் அடிப்பது, கட்டிபிடிப்பது சரியில்லை என்று ராகுல் காந்தியின் செயல்பாடுகளுக்கு தனது அதிருப்தியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வெளிப்படுத்தியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, பிரதமர் மோடியையும், அரசையும் கடுமையாக விமர்சித்தார். அவற்றை சிரித்தபடியே கடந்தார் மோடி. உரையை முடித்த பிறகு, நான் அன்பை மட்டுமே வலியுறுத்துகிறேன், வெறுப்பை கிடையாது என கூறியபடி, பிரதமர் நரேந்திர மோடி இருக்கைக்கே சென்று அவரை கட்டியணைத்தார் ராகுல் காந்தி.

பின்னர் தனது இருக்கைக்கு வந்த ராகுல் காந்தி, அருகேயிருந்த உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருந்ததோடு, கண்ணடித்தார். கேரள நடிகை பிரியா வாரியரை போல ராகுல் கண்ணடித்ததாக, சமூக வலைத்தளங்களில் கேலி ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையில் கூறுகையில், நான் யாரையும், யாரும் கட்டி பிடிக்க கூடாது என கூற விரும்பவில்லை. நானும் ஒரு தாய்தான். ஆனால், நடந்து கொண்ட விதம்தான் சரியில்லை. இருக்கைக்கு வந்து உட்கார்ந்த பிறகு கண் அடிப்பது, பேசிக்கொண்டிருப்பது சரியில்லை. அவையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தியை மென்மையாக கண்டித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory