» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுல் கட்டிப்பிடித்தது பிரதமர் மோடிக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் : சிவசேனா புகழாரம்

சனி 21, ஜூலை 2018 3:25:39 PM (IST)

பிரதமரை ராகுல் கட்டிப்பிடித்தது வெறும் வைத்தியம் அல்ல. அது மோடிக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் என சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது.

காங்., தலைவர் ராகுலை முதன் முதலில் பப்பு என முதலில் விமர்சித்த சிவசேனா, கடந்த ஆண்டு பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு, அடுத்த பிரதமராகும் தகுதி ராகுலுக்கு தான் உள்ளது என புகழ்ந்தது. கர்நாடக தேர்தலின் போதும் ராகுலுக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறி வந்தது. மத்திய அரசுக்கு எதிராக நேற்று லோக்சபாவில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது கடைநேரத்தில், ஓட்டளிப்பதை புறக்கணித்து அவையில் இருந்து சிவசேனா வெளிநடப்பு செய்தது. 

பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே சிவசேனா ஓட்டளிக்கும் என மூத்த அமைச்சர்கள் பலரும் நம்பிக்கையுடன் கூறிவந்த நிலையில், ஓட்டளிப்பதை புறக்கணித்த சிவசேனா, விவாத்தின் போது பா.ஜ., மற்றும் பிரதமர் மோடியை மிக கடுமையாக தாக்கி ராகுல் பேசியதை பாராட்டி உள்ளது.

ராகுலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத், பிரதமரை ராகுல் கட்டிப்பிடித்தது வெறும் கட்டிப்பிடி வைத்தியம் அல்ல. அது பிரதமர் மோடிக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம். மக்கள் இதனை நாடகம் என்கிறார்கள். ஆனால் இது அரசியலில் நாடகம். இது ராகுல் உண்மையான அரசியல் பள்ளியில் பயின்று வந்தவர் என்பதையே தெளிவாக காட்டுகிறது. இது வெறும் ஆரம்பம் தான் என புகழ்ந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory