» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை : பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்.

சனி 21, ஜூலை 2018 7:55:14 PM (IST)

இலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை பிரதமர் நரேந்திரமோடி புது டெல்லியிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.
 
இலங்கை நாட்டிற்கு இந்தியா நட்பு அடிப்படையில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உதவியுடன் இலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவு படுத்தும் திட்டத்தை இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக துவக்கி வைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் புது டெல்லியிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்று நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி இலங்கை முழுவதும் இந்த சேவையை விரிவு படுத்த இந்தியா உதவியதில் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் நிகழ்வுகளில் ஆம்புலன்ஸ் சேவை திட்டம் முக்கிய அம்சம் என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory