» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கருணாநிதியின் இறுதிச்சடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது - மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
புதன் 8, ஆகஸ்ட் 2018 4:43:37 PM (IST)
கருணாநிதியின் இறுதிசடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது என்று டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்நிலையில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுபற்றிய திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது. இந்த மனு மீது பதிலளிக்கும்படி இன்று காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது.
இரு தரப்பினரும் அனல் பறக்கும் வாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு வாதமும் நிறைவடைந்ததும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யப்போவது இல்லை என முடிவு எடுத்து கோர்ட்டில் அறிவித்தது. ஆனால் டிராபிக் ராமசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. மெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரிய கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும் கருணாநிதியின் இறுதி சடங்கை நிறுத்த முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரியா விடை: சொந்த ஊர்களில் கண்ணீர் அஞ்சலி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:59:19 AM (IST)

வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக சேவாக் அறிவிப்பு
சனி 16, பிப்ரவரி 2019 5:24:09 PM (IST)

தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி
சனி 16, பிப்ரவரி 2019 4:58:09 PM (IST)

தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசின் பக்கம் துணை நிற்போம்: எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு
சனி 16, பிப்ரவரி 2019 4:03:22 PM (IST)

பிரதமர் மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் பழுது: முதல் பயணத்திலேயே பழுதானதால் பரபரப்பு
சனி 16, பிப்ரவரி 2019 12:50:15 PM (IST)

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி
சனி 16, பிப்ரவரி 2019 10:31:04 AM (IST)
