» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குழந்தை அழுததால் இந்திய தம்பதியை இறக்கிவிட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் மீது புகார்!!
வியாழன் 9, ஆகஸ்ட் 2018 4:56:40 PM (IST)
குழந்தை அழுத காரணத்தால், இந்திய தம்பதியை இனவெறியுடன் திட்டி, விமானத்தில் இருந்து இறக்கிவிட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மீது விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் முயற்சித்தும் நடக்கவில்லை, திட்டியும், பிஸ்கட், சாக்லேட்டுகள் கொடுத்தும் அந்தக் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதைக்கவனித்த விமான ஊழியர்கள், குழந்தையின் அழுகையை நிறுத்துங்கள் மற்றபயணிகளுக்கு தொந்தரவாக இருக்கிறது எனக் கூறினர். ஆனால், குழந்தை நிறுத்தவில்லை என்பதால், விமானத்தில் இருந்து இறங்கிவிட்டு, மாற்றுவிமானத்தில் செல்ல அறிவுறுத்திவிட்டுச் சென்றனர். அப்போது விமான ஊழியர்கள் இந்தியத் தம்பதியை இனவெறியுடன் திட்டி, அவமானப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பின் அந்த இந்தியத் தம்பதி பெர்லின் நகரில் இருந்து வேறு விமானம் மூலம் லண்டன் நகருக்கு சென்று சேர்ந்தனர்.
இதுகுறித்து அந்த குழந்தையின் தந்தையான மத்திய சாலைப்போக்குவரத்து துறை அதிகாரி, மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த புகாரில் கூறியுள்ளதாவது: ‘‘எனது 3 வயது குழந்தை விமானத்தில் அழுதது என்பதற்காக பெர்லினில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் இறக்கிவிட்டுள்ளனர். எங்களை இனவெறியுடன் திட்டி அவமானப்படுத்தினார்கள்.
நாங்கள் குழந்தையின் அழுகையை நிறுத்திவிடுகிறோம், நீங்கள் விமானப்பயணத்தை தொடரலாம் என்று கூறியும், இனவெறியுடன் வார்த்தையைக் கூறி இந்தியர்கள் எப்போதும் இப்படித்தான் என்று திட்டினார்கள். எங்களின் இருக்கைக்குப் பின்புறம் அமர்ந்திருந்த இந்தியர்களும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து குழந்தையின் அழுகை நிறுத்த முயற்சித்தனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும’’ என புகாரில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இது பிரச்சினை குறித்து விளக்கம் அளிக்கையில், ‘‘இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வோம். எந்த வகையிலும் இனவெறி உள்ளிட்ட எந்த அடிப்படையிலும் பாகுபாட்டை பொறுத்துக்கொள்ள மாட்டோம். இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்துவோம், அந்தப் பயணியையும் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டு அடுத்த விரிவாக அறிக்கை விடுகிறோம்” எனத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உத்தரபிரதேச அரசின் பசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகை ஹேமமாலினி நியமனம்
சனி 23, பிப்ரவரி 2019 4:56:28 PM (IST)

வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதம் நடத்த மோடி தயாரா?: ராகுல் சவால்
சனி 23, பிப்ரவரி 2019 3:50:30 PM (IST)

பெங்களூரில் ஏரோ இந்தியா கண்காட்சியில் தீ விபத்து : 100 கார்கள் சேதம்
சனி 23, பிப்ரவரி 2019 2:15:01 PM (IST)

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் உறுதி
சனி 23, பிப்ரவரி 2019 8:45:45 AM (IST)

புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:20:04 AM (IST)

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:09:19 AM (IST)

உண்மை சொல்பவன்Aug 9, 2018 - 06:06:09 PM | Posted IP 162.1*****