» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...மீட்புப் பணிக்காக ராணுவ உதவி : முதல்வர்

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 5:56:04 PM (IST)

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக ராணுவ உதவியை முதல்வர் கோரியுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு துறை அதிகாரிகளும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் இன்றும் கேரளா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளன. இரண்டு நாட்களில் மட்டும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரைக் காணவில்லை.  இந்த மழை நாளை வரை நீடிக்கும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ள நிலையில், மீட்புப் பணிக்காக ராணுவ உதவி கோரப்பட்டுள்ளது.  ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையிடமும் உதவி கோரப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளன. இந்த மழை நாளை வரை நீடிக்கும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  இந்நிலையில், கனமழை காரணமாக அம்மாநிலத்தின் கொச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுவதாக கொச்சி விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், சென்னையில் இருந்து கொச்சி செல்லும் இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory