» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு செல்கிறார் மத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங்

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 7:53:48 PM (IST)

கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிடுகிறார். 

கேரளா மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை மற்றும் நிலச்சரிவால் இரு தினங்களில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஏராளமான சாலைகள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். 

மேலும், மத்திய அரசு உதவி செய்வதாக அவரிடம் உறுதியளித்தார். இந்நிலையில், அவர் வரும் ஞாயிற்றுக்கிழமை கேரளாவுக்கு நேரில் சென்று வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேரளாவுக்கு செல்லும் அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory