» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அதிமுக சட்ட விதிகளை திருத்திய விவகாரம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 13, செப்டம்பர் 2018 4:31:18 PM (IST)

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்துசெய்ய கோரிய வழக்கில் ஈபிஎஸ், ஓபிஎஸ் பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்துசெய்ய கோரி கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 3 வாரங்களில் பதில்தர வேண்டும் எனவும், அனைத்து தரப்பினரும் இந்திய தேர்தல் ஆணையத்தில் 3 வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

மேலும்,  கே.சி.பழனிசாமியின் மனு மீது முடிவெடுக்க உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற ஆணையை எதிர்த்து முதல்வர், துணை முதல்வர் தொடர்ந்த மனு நிராகரிக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்ட 4 வாரத்திற்குள் கே.சி.பழனிசாமி மனு மீது முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அதிமுக விதிகளில் திருத்தம் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுகவில் இருந்தவர்களை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory