» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்

வியாழன் 13, செப்டம்பர் 2018 7:52:35 PM (IST)

உச்ச நீதிமன்றத்தின் புதிய  தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (வியாழக்கிழமை) நியமித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த  தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யின் பெயரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அலுவலகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.இதற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக பரிந்துரையை அவருக்கு அனுப்பியது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யை இன்று நியமித்தார். உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சன் கோகாய் அக்டோபர் 3-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory