» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முந்தைய காங்கிரஸ் ஆட்சி மல்லையாவுக்கு ஆதரவாக இருந்தது : நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!!

வெள்ளி 14, செப்டம்பர் 2018 12:01:04 PM (IST)

முந்தைய காங்கிரஸ் ஆட்சி மல்லையாவுக்கு ஆதரவாக செயல்பட்டதை திசைதிருப்பவே ஜேட்லிக்கு எதிராக அக்கட்சி குற்றம்சாட்டுகிறது என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  கூறினார். 

லண்டனில் உள்ள விஜய் மல்லையா, இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகக் கூறினார். இதையடுத்து, அவர் தப்பிச் சென்றதில் ஜேட்லியும் உடந்தையாக இருந்தார் என்றும், அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், மல்லையா விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவரும் நிதி அமைச்சர் ஜேட்லிக்கு சக மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். 

மல்லையா ஒரு குற்றவாளி; அவரின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், விதிமுறைகளை மீறி, விஜய் மல்லையாவுக்கு கடன் அளிக்குமாறு முந்தைய காங்கிரஸ் அரசு வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது. ராகுல் காந்தியின் குடும்பத்தினர் மல்லையாவுடன் நட்பு பாராட்டியது குறித்து ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும். ராகுல் காந்திதான் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார்.

நிர்மலா சீதாராமன்: 

மல்லையா உடனான சந்திப்பு விவகாரத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மல்லையாவுக்கு ஆதரவாக செயல்பட்டதை திசைதிருப்பவே இவ்வாறு அக்கட்சி ஜேட்லிக்கு எதிராக குற்றம்சாட்டுகிறது என்றார். 

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜேட்லியும், மல்லையாவும் சந்தித்து பேசியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி.யான புனியா கூறியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, அந்த விடியோ பதிவில் அவர்கள் பேசியதும் பதிவாகியிருக்குமா? என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். இவர்களை போல், ஜேட்லிக்கு ஆதரவாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஒருவன்Sep 14, 2018 - 01:42:14 PM | Posted IP 141.1*****

வாயால் வடை சுடும் பொம்பிளை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory