» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட்: மகாராஷ்டிர நீதிமன்றம் உத்தரவால் பரபரப்பு!!

வெள்ளி 14, செப்டம்பர் 2018 12:22:48 PM (IST)

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மகாராஷ்டிர நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் கோதாவரி ஆற்றின் குறுக்கே பாப்ஸி என்ற அணையைக் கட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் 144 தடை உத்தரவை மீறி அணையை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர். இதுதொடர்பான வழக்கு மகாராஷ்டிரா மாநிலம், துர்ஹமபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில், ஆஜராக சந்திரபாபு நாயுடு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஒருமுறைகூட ஆஜராகவில்லை. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேரும் இம்மாதம் 21ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளது. இதனிடையே சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் பின்னணியில் மோடி, அமித்ஷாவின் சதிச்செயல் உள்ளது என்று தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் லங்கா தினகர் குற்றம்சாட்டியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory