» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சீன எல்லையில் இந்திய படைகள் குறைக்கப்படாது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:12:24 PM (IST)

சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய படைகள் குறைக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச் சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, "வுஹான் நகரில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தியபோது, எல்லையில் இருதரப்பு வீரர்களும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதை அந்நாட்டு வீரர்கள் கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறேன். நமது வீரர்களும் அமைதி காப்பார்கள். அதேநேரம், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், எல்லையில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வீரர்களுக்கு அறுவுறுத்தி உள்ளேன். குறிப்பாக எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது” என்றார்.

டோக்லாம் எல்லையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு பிறகு சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை வுஹான் நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது, டோக்லாம் போன்ற பதற்றம் மீண்டும் ஏற்படுவதை தவிர்க்கவும் இருதரப்பு உறவை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. எல்லையில் இரதரப்பு ராணுவ வீரர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில், கடந்த மாதம் இந்தியா வந்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்கே, நிர்மலா சீதாராமனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டோக்லாம் போன்ற பிரச்சினையை தவிர்க்க, இருதரப்பு ராணுவத்துக்கிடையே பேச்சுவார்த்தை நடத்துவதை அதிகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory