» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு: முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:56:22 PM (IST)

கர்நாடகத்தில் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில், விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 10-ந் தேதி நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

எனினும் விலையை குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை. இன்றும் விலை உயர்ந்தது. இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.85.31 ஆகவும், டீசல் ரூ.78 ஆகவும் விற்பனையானது. மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் 90 ரூபாயைத் தாண்டியது. இப்படியே போனால் விரைவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டும் என தெரிகிறது. எனவே, சில மாநிலங்கள் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்து விலையைக் குறைக்கத் தொடங்கி உள்ளன. 
 
அவ்வகையில் கர்நாடாகவில் பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி ரூ.2 குறைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி இன்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால், மாநில அரசு வரியைக் குறைத்து அதன்மூலம் விலையை குறைக்க முடியும் என பொதுமக்கள் விரும்பினர். எனவே, குறைந்தது 2 ரூபாய் அளவில் வரியைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என குமாரசாமி தெரிவித்தார். ஏற்கனவே, ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory