» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிர்மலா சீதாராமனுக்கு வாட்ஸ் ஆப்பில் கொலை மிரட்டல்: உத்தரகாண்ட் வாலிபர்கள் 2பேர் கைது

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 3:29:34 PM (IST)

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக  உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் சேவை தினமாக கொண்டாடப்பட்டது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டத்திலுள்ள தார்சுலா நகரில் ராணுவம் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமினை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். ஆனால் இந்நிகழ்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் வருவதை முன்கூட்டியே அறிந்த ஒருவர், நேற்று முன்தினம் தனது வாட்ஸ் அப் குரூப்பில் ஒரு தகவலை பதிவிட்டார்.

அப்போது நேரம் இரவு 9.30. அந்த தகவலில், "நான் நிர்மலா சீதாராமனை துப்பாக்கியால் சுடப்போகிறேன். நாளையே அவரது கடைசி நாள் என்று சொல்லி இருந்தார்.குரூப்பில் இந்த தகவலை அவர் பதிவிட்டதும், அதற்கு இன்னொருவர் வந்து வாட்ஸ்அப்பில் சர்ச்சையான பதிலை பதிவிட்டார். இப்படி இருவரும் மாறி மாறி தகவல்களை பரிமாறிக் கொண்டனர். ஆனால் இந்த தகவல் உளவுத்துறையினருக்கு தெரிந்துவிட்டது. உடனடியாக இந்த இரண்டு பேர் யார் என்பது குறித்து விசாரணையில் இறங்கினர். 

இரவோடு இரவாக விரட்டி பிடித்து ஒருவழியாக நேற்று காலையில் கண்டுபிடித்து விட்டார்கள். அவர்களிடம் உத்தரகாண்ட் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இரண்டு பேருமே மெசேஜ் அனுப்பிய ராத்திரி நேரத்தில் செம போதையில இருந்ததாக தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர்களை கைது செய்த போலீசார், கொலை மிரட்டல் பிரிவு 506 மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அந்த வாட்ஸ்அப் குரூப்பின் அட்மினிடமும் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory