» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப்: முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 5:33:04 PM (IST)

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய பிஷப் பிராங்கோ கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப் ஆக பணியாற்றி வந்தவர் பிராங்கோ முலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்ட யத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். கடந்த 2014 முதல் 2016 வரை பிராங்கோ தன்னைப் 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

இப்புகார் மீது கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. எனினும் பிஷப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக கேரளாவில் போராட்டம் வெடித்தது. மாநில அரசு மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
 
அதில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஏதுவாக பிஷப் பதவி விலகியுள்ளார். தனது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். பிராங்கோ நாளை போலீஸார் முன்னிலையில் ஆஜராக உள்ள நிலையில் போலீஸார் கைது செய்யக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. இதனால், முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறுகைகயில் ‘‘கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி திட்டமிட்டே என் மீது புகார் கூறப்படுகிறது. கன்னியாஸ்திரி கூறிய தகவல் அனைத்தும் புனையப்பட்ட கதை மட்டுமே. தவறான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு என்னை சிக்க வைக்க சதி நடப்பதால் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘‘நேரில் ஆஜராக கோரி பிஷப் பிராங்கோவுக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பி விட்டோம். அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கிறோம். கைது செய்வது குறித்து விசாரணைக்கு பிறகே தெரிய வரும்’’ என தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

கேட்ச்Sep 20, 2018 - 11:10:04 AM | Posted IP 141.1*****

விரைவான விசாரணை தேவை, காலம் தாழ்த்தும் பொது குற்றவாளிகள் தப்பி விடுகிறார்கள். தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். கேரள செய்தியை தமிழ்நாட்டில் ஏன் பெரிதாக காண்பிக்கிறார்கள், இங்கு நமக்கிருக்கும் அக்கப்போர்களுக்கே நேரம் சரி இல்லை.

தமிழன்Sep 19, 2018 - 01:30:45 PM | Posted IP 172.6*****

இவரை மாதிரி போலி பாதிரியார்களுக்கெல்லாம் ஜாமின் வழங்கக்கூடாது .... சட்டத்தின் முன் அனைவரும் சமமே...பாதிக்கப்பட்ட சகோதரிக்கு நியாயம் கிடைக்கவேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory