» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருவனந்தபுரம் விலங்கியல் பூங்காவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ? விலங்குகள் தவிப்பு

புதன் 19, செப்டம்பர் 2018 1:56:23 PM (IST)

கேரளாவின் திருவனந்தபுரம் விலங்கியல் பூங்காவில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் விலங்கியல் பூங்காவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக திருவனந்தபுரம் விலங்கியல் பூங்காவிற்கு குடிநீர் சேவையை கேரள தண்ணீர் கட்டுப்பாட்டு ஆணையம் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பூங்காவில் உள்ள 3.5 ஏக்கர் குளத்திற்கும், காண்டாமிருகத்தின் தேவைக்கும் பூங்கா அதிகாரிகள் தண்ணீர் பயன்படுத்தி வருகின்றனர். 

இதுதொடர்பாக இரு துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தண்ணீர் வாரியத்திடம் தொடர்ந்து தண்ணீர் பெற்று வந்தோம். ஆனால் இடையில் ஏற்பட்ட கசிவு காரணமாக தண்ணீர் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory