» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா மீது இந்திய விமானப் பணிப்பெண் பாலியல் புகார்

வியாழன் 11, அக்டோபர் 2018 5:40:21 PM (IST)

இலங்கை  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இலங்கை  அமைச்சருமான  அர்ஜுனா ரணதுங்கா மீது இந்திய விமானப் பணிப்பெண் பாலியல் புகார் கூறியுள்ளார். 

1996ஆம் ஆண்டு இலங்கை  உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர்  ரணதுங்கா.  இவர் 296 ஒருநாள் போட்டிகள் மற்றும் 93 டெஸ்ட் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடி உள்ளார்.இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் புதன்கிழமை பேஸ்புக்கில்,  தன்னை இந்திய ஓட்டலில் நீச்சல் குளம் அருகே ரணதுங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி உள்ளார்.

ஒட்டலின் நீச்சல் குளம் அருகே நடந்து சென்ற போது ரணதுங்கா என் இடுப்பை பிடித்து கொண்டு இழுத்து, என் மார்பின் பக்கமாக கைகளை நெகிழ்ந்து, மிக மோசமான  செய்கைகளை செய்தார்.  கால்களில் உதைத்து ஓடினேன். அவர் பாஸ்போர்ட் ரத்து செய்யபடும்  மற்றும்  போலீசாரிடம் தெரிவிப்பேன் என அச்சுறுத்தினார். நான் வரவேற்பறை  சென்று இது குறித்து ஒட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்தேன். இருந்தாலும் இது உங்கள் தனிப்பட்ட விஷயம் என்று கூறி விட்டனர் என கூறி உள்ளார்.

தமிழகத்தில் பாலியல் ரீதியாக  துன்புறுத்தல் குறித்து பதிவிட்டு வரும் பாடகி சின்மயி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.  இந்திய பிரிமீயர் லீக்  சீசனின் போது  மும்பையில் உள்ள ஓட்டல் அறையில் ஒரு பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறி உள்ளார். கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா என்று சின்மயி குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory