» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தை நாட முஸ்லிம் பெண்கள் முடிவு

வெள்ளி 12, அக்டோபர் 2018 8:54:23 AM (IST)

மசூதியில் பெண்கள் தொழுகை நடத்தவும், இமாம்களாக பெண்களை நியமினம் செய்ய அனுமதிக்கவும் உச்சநீதிமன்றத்தை    நாட கேரளாவில் உள்ள என்ஐஎஸ்ஏ என்ற பெண்கள் கூட்டமைப்பு விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளது. 

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நம்பிக்கை பெற்ற முஸ்லிம் பெண்கள் "மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றத்தை  நாட முடிவு செய்துள்ளனர். முஸ்லிம் மதத்தில் பாலின சமத்துவத்திற்காக பிரசாரம் மேற்கொண்டுவரும் அமைப்பு, பலதார திருமணம், நிக்கா ஹலாலாவை (விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் அந்த நபரே திருமணம் செய்வது) அனுமதிக்கும் முஸ்லிம் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. என்ஐஎஸ்ஏ அமைப்பின் தலைவர் வி.பி.ஜுஹாரா பேசுகையில், புனித குர்ஆன் நூலிலும், இறைத்தூதர் முகமது நபியும் ஒருபோதும் பெண்கள் மசூதிக்குள் வந்து தொழுகை நடத்தக்கூடாது என்று கூறியதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஆண்களைப் போன்று, பெண்களும் தங்களுக்குரிய நம்பிக்கையின் அடிப்படையில், அரசியலமைப்பு சட்ட உரிமைகள்படி வழிபாடு நடத்த உரிமை உண்டு. சபரிமலையை போன்று, மசூதிகளிலும் அனைத்து பெண்களும் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். இதில் காட்டப்படும் பாகுபாடுகள் அகற்றப்பட்டு, உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் செல்வது தொடர்பாக எங்களுடைய வழக்கறிஞருடன் பேசி வருகிறோம். விரைவில் மனுத்தாக்கல் செய்வோம் என கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory