» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரூபாயின் மதிப்பை மீட்க மத்திய அரசு நடவடிக்கை: 15 பொருட்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்வு

வெள்ளி 12, அக்டோபர் 2018 4:03:47 PM (IST)

சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்பதற்கான முயற்சியில் 15 பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை மீட்கும் முயற்சியில் இறக்குமதி செய்யப்படும் மின்னணு, தொலைத் தொடர்பு மற்றும் உதிரிபாகங்கள் மீதான வரியை 10 சதவீத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சர்க்யூட்போர்டுகள், பேஸ் ஸ்டேசன், மற்றும் மின்னணுப் பொருட்களின் உதிரிபாகங்கள் போன்றவற்றின் விலை உயர்கிறது.

இதனையடுத்து, குளிசாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், பிரிட்ஜ் போன்ற மின்னணு சாதனங்கள் மீதான வரி 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆடம்பரப் பொருட்கள், அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படாத பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் தொலைத் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட 15 பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 26-ம் தேதி பல்வேறு பொருட்களின் மீதான வரி இரட்டிப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory