» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலையில் தமிழக பெண் பக்தர் தரிசனத்திற்கு வந்ததால் பதற்றம்? ஆட்சியர் விளக்கம்

சனி 20, அக்டோபர் 2018 4:20:19 PM (IST)சபரிமலைக்கு பெண் பக்தர் தரிசனத்திற்காக வந்ததால் சன்னிதானத்தில் எந்தஒரு பதற்றமும் கிடையாது என பத்தினம்திட்டா ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

சபரிமலையில் பெண்களுக்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில் திருச்சியை சேர்ந்த வயதான பக்தர் ஒருவர் குடும்பத்துடன் சபரிமலைக்கு சென்றுள்ளார். இப்போது எதிர்ப்பு நிலவுவதால் அவருக்கும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியது. பின்னர் அவர் தன்னுடைய வயதை உறுதி செய்துவிட்டு 18 படியை ஏறி சாமி தரிசனம் செய்துள்ளார். அவருக்கு எதிராக பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் சன்னிதானம் பகுதியில் இன்றும் பதற்றமான நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

சபரிமலையில் போராட்டம் காரணமாக ஏற்கனவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதற்றம் என்பதை பத்தினம்திட்டா ஆட்சியர் மறுத்துள்ளார். பத்தினம்திட்டா ஆட்சியர் பிபி நூத் பேசுகையில், "பெண் தரிசனத்திற்காக சன்னிதானம் வந்தார். சில செய்தி சேனல்கள் அவர்களை பின் தொடர்ந்தது. இதனால் அங்கு கூட்டம் கூடியது. அதுதான் பிரச்சனை.” என்று கூறியுள்ளார். இதற்கிடையே இளம்பெண்கள் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்று பரவும் செய்தியையும் வதந்தி என மறுத்துள்ளார். அய்யப்ப பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகாளையும் மாவட்ட நிர்வாகம் செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory