» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அசாமில் அரசு பேருந்து சாலையோர குட்டைக்குள் விழுந்து விபத்து: ஏழு பேர் பலி

சனி 20, அக்டோபர் 2018 8:19:03 PM (IST)

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சென்ற அரசு பேருந்து குளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்களட வெளியாகி உள்ளது. 

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து இன்று சுமார் 50 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து பார்பேட்டா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. நல்பாரி மாவட்டத்தின் வழியாக சென்றபோது அடபாரி என்னுமிடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்து குட்டைக்குள் விழுந்துள்ளது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

பின்னர் தகவல் அறிந்து போலீஸாரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 21 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory