» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொடர் விடுமுறை எதிரொலி : ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

சனி 20, அக்டோபர் 2018 8:36:20 PM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை எதிரொலியால் கூட்டம் அலைமோதுவதால், 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறனர்.

ஆயுதபூஜை, விஜயதசமி, வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலையில் இருந்து, அதிகாலை 3 மணி வரை 76ஆயிரத்து 514 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலவச தரிசனத்துக்காக  இரண்டு கிலோ மீட்டர் தூரம் நீண்டிருந்த வரிசையில் காத்திருந்த பக்தர்கள் 24 மணி நேரம் கழித்து தரிசனம் செய்து வருகிறனர். ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். வரும் நாட்களில் மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory