» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்க, வெடிக்கத் தடையில்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 23, அக்டோபர் 2018 11:44:09 AM (IST)

நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனினும் விற்பனைக்கு நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ள நீதிமன்றம், திருவிழாக்கள், திருமணங்களில் ரசாயனப் பொடி தூவிய பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும். இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். புத்தாண்டு, கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவு 11.55 முதல் 12.30 வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத கடைகளில் விற்பனை செய்யக் கூடாது என்றும் ஆன்லைனில் விற்கத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. அதேபோல டெல்லியில் பட்டாசு வெடிக்க 2016-ல் விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பட்டாசு தயாரிக்க, விற்க, வெடிக்கத் தடை விதித்து கடந்த 2016-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி விசாரணை முடிந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை), நாடு முழுவதும் பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் பட்டாசுக்குத் தடை நீங்கியதால் பட்டாசு உற்பத்தியாளர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory