» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: பயணிகள் கடும் அவதி

வியாழன் 8, நவம்பர் 2018 11:34:42 AM (IST)



ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஒரு பிரிவினர் நேற்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை தரும் விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. விமான போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் விமான பயணிகள் சிலர் தங்கள் அசவுகர்யத்தை வெளியிட்டனர். ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறும் போது, " நிலமையை மதிப்பிட்டு வருவதாகவும், விமான போக்குவரத்து இடையூறை சரி செய்யும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory