» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அத்வானியின் 91வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா வாழ்த்து

வியாழன் 8, நவம்பர் 2018 4:04:10 PM (IST)

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியின் 91வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானி செய்திருக்கும் பணியானது சிறந்த வகையில் நினைவுக்கூரத்தக்கது. அவர் அமைச்சரவையில் அங்கம் வகித்த போது அவர் எடுத்த கொள்கைகளும், அவரது செயல்பாடுகளும் பாராட்டத்தக்கது என்றும் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தப் பெருமையும், அடல் பிகாரி வாஜ்பாயி ஆட்சி காலத்தில் துணைப் பிரதமராக பதவியேற்று சுயநலமற்ற மற்றும் கடமையுணர்ச்சியோடு பணியாற்றியவர் என்றும் அத்வானியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இதுபோல் மத்திய அமைச்சர்கள், பாஜக கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory