» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டார் மோடி: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

வெள்ளி 9, நவம்பர் 2018 11:59:49 AM (IST)

பிரதமர் மோடி தனி நபராக, இந்திய பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் நாசமாக்கிவிட்டார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் 2ம் ஆண்டு நிறைவு தினம் என்பதால், சீதாராம் யெச்சூரி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.மத்திய அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக் காரணமாக இந்திய பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் சீரழிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். 

மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையினால் கருப்புப் பணம் ஒழியும், ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த முடியும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று கூறினார்கள். ஆனால் 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. மோடி மௌனமாக இருக்கிறார். உண்மை என்னவென்றால், மோடி தனி நபராக, இந்திய பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களையும் நாசமாக்கிவிட்டார் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory