» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக முதல்வரிடம் கேட்டறிந்த குடியரசுத்தலைவர்

திங்கள் 19, நவம்பர் 2018 1:08:39 PM (IST)

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கொட்டைஎன்றுபல பகுதிகளில் மக்கள் தங்களின் வீடு மற்றும் விவசாய நிலத்தை இழந்துள்ளனர். சுமார் 1,17,624 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. புயல் காரணமாக தற்போது வரை 45 போ் உயிரிழந்திருப்பதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளார். கஜா புயலில் பாதித்த இடங்களை முதல்வர் பழனிச்சாமி நாளைபார்வையிடுவதாக கூறியுள்ளார். மேலும் புயலின் பாதிப்பு குறித்து பிரதமரை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். 

இந்நிலையில் இன்று கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம்கேட்டறிந்ததாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் முதல்வர் எடப்பட்டி பழனிசாமியிடம் கஜா புயல்பாதிப்புகள் தொடர்பாக கேட்டறிந்தேன்.கஜா புயலால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory