» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோத்ரா கலவரம்: மோடி மீதான வழக்கில் அடுத்த மாதம் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 4, டிசம்பர் 2018 9:04:43 AM (IST)

கோத்ரா கலவரம் தொடர்பாக  பிரதமர் மோடி மீதான வழக்கின் விசாரணையை ஜனவரி 3வது வாரத்துக்கு  உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

குஜராத் கலவர வழக்கில் அப்போதைய முதல்வர் மோடி மீது எந்த குற்றமும் இல்லை என சிறப்பு புலனா–்ய்வு குழு தாக்கல் செய்த அறிக்கைக்கு எதிராக, ஷகியா ஜாப்ரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் அடுத்த மாதம் விசாரிக்கிறது. குஜராத் மாநிலம், கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு சமர்பதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைக்கப்பட்டதற்கு மறுநாள், ஒரு கும்பல் அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் தாக்குதல் நடத்தியது. இதில் முன்னாள் எம்பி இசான் ஜாப்ரி என்பவர் உட்பட 68 பேர் கொல்லப்ட்டனர். 

இது குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, இந்த கலவரத்தில் குஜராத்தின் அப்போதைய முதல்வர் மோடி உட்பட 63 பேர் மீது எந்த குற்றமும் இல்லை என கடந்த 2012ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்து இந்த வழக்கை முடித்தது. இதை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதை எதிர்த்து ஜாப்ரியின் மனைவி ஷகியா தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து இசான் ஜாப்ரியின் மனைவி ஷகியா ஜாப்ரி, குஜராத் உயர்மன்றத்தில் மனு செய்தார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரி என குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு கூறியது.  இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 

இந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணை நடந்தது. அப்போது இது குறித்து சமூக ஆர்வர் டீஸ்டா செதால்வத் என்பவரும் மனு செய்துள்ளார். அவரை இரண்டாவது மனுதாரராக இந்த வழக்கில் சேர்க்கிறோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. சிறப்பு புலனாய்வு குழு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகில் ரோத்தகி, ‘‘ஷகியாவின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை’’ என்றார். டீஸ்டாவை 2வது மனுதாரராக சேர்ப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இவர்களின் கோரிக்கை ஆதரவாக எந்த ஆவணங்களும் இணைக்கப்படவில்லை’’ என்றார். 

ஷகியாவின் வக்கீல் சி.யு.சிங் வாதிடுகையில், ‘‘எஸ்.ஐடி அறிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது சரி என உயர் நீதிமன்றம் தவறாக உத்தரவு பிறப்பித்துள்ளது’’ என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கன்வில்கர், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 3வது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory