» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் : தமிழகஅரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 4, டிசம்பர் 2018 1:45:10 PM (IST)

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைதான கருப்பசாமி ஜாமீன் மனு குறித்து பதில் தர தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் முருகன், பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

இதில் மூவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த வழக்கை நடத்தக் கோரியும் ஜெயசுதீன் என்பவர் உச்ச நீதிமன்றத்தின் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory