» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஓ.பி.எஸ் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

புதன் 5, டிசம்பர் 2018 3:32:13 PM (IST)

எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஆதரவு 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில்  தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது. 

ஜெ. மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. பிளவுபட்ட போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது. அப்போது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். என்றாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

பின்னர் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இன்று விசாரணையை தொடங்கியது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory