» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் செயலாளர் குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 5, டிசம்பர் 2018 5:39:53 PM (IST)
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் இரண்டு அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதி பரத் பராஷர் முன் நடந்த இந்த விசாரணையின் முடிவில் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. அப்போது, குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதிக அளவில் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. தரப்பு கோர்ட்டில் வாதிட்டது. 70 வயது குப்தாவுக்கு பல்வேறு நோய்கள் இருப்பதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தார். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா, மற்ற இரண்டு அதிகாரிகளான கே.எஸ்.கிரோபா, கே.சி.சம்ரியா ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மற்ற குற்றவாளிகளான விஎம்பிஎல் நிறுவன நிர்வாக இயக்குனர் விகாஸ் பன்டி, நிறுவனத்தின் சார்பில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட அதிகாரி ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விஎம்பிஎல் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:20:04 AM (IST)

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:09:19 AM (IST)

11 லட்சம் பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்றுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வியாழன் 21, பிப்ரவரி 2019 5:05:36 PM (IST)

ஜம்முவில் புல்வாமா தாக்குதல் பாதிப்பிலிருந்து இயல்பு நிலை திரும்பியது: ஊரடங்கு உத்தரவு நீக்கம்!!
வியாழன் 21, பிப்ரவரி 2019 4:15:26 PM (IST)

நளினி சிதம்பரம் தொடர்புடைய சாரதா சிட்பண்ட் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்!!
புதன் 20, பிப்ரவரி 2019 5:51:27 PM (IST)

அயோத்தி வழக்கில் 26-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
புதன் 20, பிப்ரவரி 2019 5:46:17 PM (IST)
