» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராமர் கோவில் கட்டாததால்தான் பாஜக தோல்வியடைந்தது : விஎச்பி தலைவர் பேட்டி

புதன் 12, டிசம்பர் 2018 8:09:09 PM (IST)

ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக ஆட்சி அதிகாரத்தை இழந்ததற்கு காரணம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டாததே என்று விஎச்பி தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக ஆட்சி அதிகாரத்தை இழந்ததற்குக் காரணம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டாததே என்று விஎச்பி அமைப்பின் மத்திய ஆலோசகர் புருஷோத்தம் நாராயண் சிங் தெரிவித்தார். 

அவர் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பாஜக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால்தான் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது.தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி அல்ல. இது ராமபிரானின் பக்தர்களுக்குக் கிடைத்த தற்காலிக ஏமாற்றம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory