» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மூதாட்டிபோல் வேடமணிந்து சபரிமலையில் ஐயப்பனை தரிசித்த 36 வயதுப் பெண்

வியாழன் 10, ஜனவரி 2019 4:39:00 PM (IST)

36 வயது தலித் செயற்பாட்டாளர் தனது தலைமுடிக்கு வெள்ளை நிற டை அடித்து சபரிமலையில் ஐயப்பனை தரிசித்துள்ளார்.

இதுகுறித்து மஞ்சு என்ற அந்தப் பெண் கூறுகையில், ஜனவரி 8-ஆம் தேதி நான் சபரிமலை சென்று தரிசித்தேன். எனக்கு அப்போது எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. மேலும் அங்கு சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக இருந்தேன். நான் 50 வயதுக்கும் குறைவான பெண் என்பதால் தரிசனம் தொடர்பாக ஐயப்ப சேவா சங்கத்திடமும் உதவி கேட்டேன் என்றார்.

இதை உறுதிபடுத்தும் விதமாக சமூக வலைதளமான ஃபேஸ்புக் பக்கத்தில் சபரிமலையில் மஞ்சு இருப்பது போன்ற ஏராளமான புகைப்படங்கள் மற்றும் விடியோப் பதிவுகள் வைரலாகப் பரவின. முன்னதாக, அக்டோபர் மாதமே சபரிமலை சென்று தரிசனம் செய்ய வேண்டும் என மஞ்சு முயற்சித்துள்ளார். இருப்பினும் அப்போது பெய்த கனமழையை காரணம் காட்டி போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory