» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆளில்லாத இரண்டு விண்கலங்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

வெள்ளி 11, ஜனவரி 2019 2:00:29 PM (IST)

வரும் 2020ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டு ஜூலையிலும் இரண்டு ஆளில்லா விண்கலங்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை இஸ்ரோ தலைவர் சிவன் சந்தித்தார். அப்போது 2018ம் ஆண்டு இஸ்ரோவில் 17 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதில் 2 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும் அடங்கும்.2020ம் ஆண்டு டிசம்பரில் ஒரு விண்கலமும், 2021 ஜூலையில் 2வது விண்கலமும் விண்ணுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளி வீரர்களுடன், விண்கலத்தை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இது இஸ்ரோவின் மிகப் பெரிய திருப்பு முனை திட்டமாகும் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory